January 29, 2022

News window

News around the world

youth was stabbed to death near Oragadam | ஒரகடம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சந்துரு. இவருக்கு வயது 26. இவர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (25) என்பவருடன் இரண்டு தினங்களுக்கு முன்பு வாய் தகராறில் சந்துரு செய்துள்ளார். இதனிடையே நேற்று இரவு மது அருந்திய தினேஷ் போதையில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சந்துருவிடம் அவரது குடும்பத்தினரை தரம் தாழ்த்திப் பேசி தகராறு செய்துள்ளார். 

ALSO READ | கோவை: பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்! 59 வயது முதியவர் கைது!

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி உள்ளனர். பின்னர் நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள கடை வெளிப்புறத்தில் சந்துரு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது தினேஷ் சந்துருவை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் முகம், உடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமுற்று ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த படி கூச்சலிட்டு உள்ளார்.

சந்துருவின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சந்துருவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தயார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான தினேஷை வலைவீசி தேடி வருகின்றனர். மதுபோதையில் இருந்த இளைஞர் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source link