December 9, 2021

News window

News around the world

TN Heavy rain – Central Government Review | தமிழகத்தின் 11 மாவட்டங்களில் 2 நாட்கள் மத்திய குழு நேரில் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் பரவலாக மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,கடலூர் வேலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலமும் கனமழை மழை காரணமாக மிகுந்த பாதிப்பிற்குளானது.

கனமழை காரணமாக  விளைநிலங்களில் பயிரிடப்பட்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கியது. தொடர் மழையால் பல மாவட்டங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தததால் இடிந்து சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கின் காரணமாக பலப்பகுதிகளில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், தரைபாலங்கள் அடித்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த குழு ஆய்வு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது. பின்னர் இந்த அறிக்கை டி.ஆர்.பாலு எம்.பி. மூலமாக தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் நேரில் கொடுக்கப்பட்டது.

ALSO READ | வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாய்க் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

அம்மனுவில் தமிழக வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 79 கோடியும், உடனடியாக ரூ.550 கோடியும் விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. மேலும் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதி அளித்திருந்தார்.

இதனையடுத்து உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்தது. அக்குழுவில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்செய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆய்வுக் குழு இன்று சென்னை வந்தடைந்தது.

ALSO READ | காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது

இன்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்துஆலோசனை நடத்துகிறது. நாளை இரு குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவானது இருக் குழுவாக ஆய்வு செய்ய உள்ளது. முதல் குழு நாளை (22-11-21) சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும், நாளை மறுநாள் (23-11-21) தஞ்சை தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது.

இரண்டாம் குழு நாளை (22-11-21) விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர்கள் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர் பின்னர் இரண்டாம் நாள் (23-11-21) வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.இந்த இரு குழுக்களும் வரும் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்பு டெல்லி திரும்புகிறது. மத்திய ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ |  பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link