December 9, 2021

News window

News around the world

t20 world cup 2021: T20 World Cup: அதிக வெற்றிகளை குவித்த டாப் 5 அணிகள் இதுதான்: முதலிடத்தில் ‘அடிவாங்கும்’ அணி!

டெஸ்ட், ஒருநாள், டி20 இந்த மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களில் மிகப்பிரபலமாக இருப்பது டி20 கிரிக்கெட்தான். காரணம், இந்த வகையான போட்டிகள் மூன்று மணி நேரத்திலேயே நடந்து முடிந்துவிடும். ஒவ்வொரு பந்தையும் பேட்ஸ்மேன் தூக்கியடிக்க முயற்சிப்பார்கள் என்பதால்தான். குறிப்பாக, டெத் ஓவர்களின்போது இருக்கும் விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களை தொடர்ந்து பரபரப்பிலேயே வைத்திருக்கும். இதனால், இந்த வகை கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.

இதனால், 2007ஆம் ஆண்டுமுதல் டி20 கிரிக்கெட்டிற்கும் உலகக் கோப்பை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து அசத்தி வரும் டாப் 5 அணிகள் குறித்து தற்போது பார்ப்போம்.

5.மேற்கிந்தியத் தீவுகள் அணி:

5-

டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 31 போட்டிகளில் பங்கேற்று 18 வெற்றிகள், 12 தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த அணியில் வெற்றி சதவீதம் 60 ஆகும்.

4.தென்னாப்பிரிக்க அணி:

4-

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி 30 போட்டிகளில் பங்கேற்று 18 வெற்றிகள், 12 தோல்விகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த அணியின் வெற்றி சதவீதம் 60 ஆகும்.

3..பாகிஸ்தான் அணி:

3-

பாகிஸ்தான் அணி மொத்தம் 34 போட்டிகளில் பங்கேற்று 19 வெற்றிகள், 15 தோல்விகளை சந்தித்து 3ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த அணியின் வெற்றி சதவீதம் 55.88 ஆகும்.

2.இந்திய அணி:

2-

இந்திய அணி மொத்தம் 33 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 21 வெற்றி, 11 தோல்விகளை சந்தித்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறது. வெற்றி சதவீதம் 65.62 ஆகும்.

1.இலங்கை அணி:

1-

இலங்கை அணி 35 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 23 வெற்றிகள், 12 தோல்விகளை சந்தித்து முதலிடத்தில் இருக்கிறது. வெற்றி சதவீதம் 65.71 ஆகும். இந்த அணி சமீப காலமாகவே படுமோசமாக விளையாடி வருகிறது. இதனால், ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் நீடிக்க முடியாமல், தற்போது நடைபெற்ற வரும் டி20 உலகக் கோப்பை நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறாமல், தகுதி சுற்றில் குட்டி அணிகளும் விளையாடி, தற்போது சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Credit