October 20, 2021

News window

News around the world

shadhul thakur: T20 World Cup 2021: இந்த வீரர் தேவையில்லை…புது வீரர சேத்தே ஆகணும்: கோலியை தோனி வற்புறுத்துவார்: வான் பளிச்! – ms dhoni could ask kohli shastri about csk star shardul s inclusion in t20 world cup squad says michael vaughan

ஐபிஎல் 14ஆவது சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் முடிந்த உடனே, இம்மாதம் 19ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் துவங்கிவிடும்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர், ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடி வருகிறார்கள், சரியான பார்மில் இருக்கிறார்களா என்பதை ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்றவர்கள் முன்பு சொதப்பினாலும், தற்போது சிறப்பாக விளையாடி பாராட்டுகளை பெற்று வருகிறார்கள்.

இருப்பினும் ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம்தான் தற்போது பிரச்சினையாக இருக்கிறது. ஆல்-ரவுண்டரான இவர், 2019ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு பந்துவீசாமல் இருந்து வருகிறார்கள். பேட்டிங்கிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், டி20 உலகக் கோப்பை அணியிலிருந்த இவர் நீக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், அவருக்கு மாற்றாக ரிசர்வ் வீரர் ஷர்தூல் தாகூரை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

T20 World Cup 2021: அணித் தேர்வில் மாற்றமா? தேர்வுக் குழு தலைவரையும் நீக்குங்க: முன்னாள் வீரர் பொளேர்!

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் மைக்கேல் வான், டி20 உலகக் கோப்பை அணியில் ஷர்தூல் தாகூரை சேர்க்க வேண்டும் என கோலியை, தோனி வற்புறுத்துவார் எனத் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் வான் பேட்டி:

“ஷர்தூல் தாகூர் அதிரடி ஆல்-ரவுண்டராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது பேட்டிங் மூலம் அனைவரையும் அசர வைத்தார். அங்கு பேட்டிங்கில் அசத்திய அவர், தற்போது ஐபிஎல் தொடரில், பந்துவீச்சில் மிரட்டி வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் 15 விக்கெட்களை கைப்பற்றி, இந்த சீசனில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய சிஎஸ்கே வீரராக இருக்கிறார். கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்திருந்தாலும், தாகூர் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார்” எனக் கூறினார்.

தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? பேர்வேல் மேட்ச் எங்கு நடக்கும்? அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

மேலும் பேசிய அவர், “தான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை தாகூர் நிரூபித்துவிட்டார். என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து ஹார்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு ஷர்தூல் தாகூரை சேர்க்க வேண்டும் என கோலியை தோனி வற்புறுத்துவார். இதுதொடர்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலியுடன் தோனி விவாதிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

Credit