January 29, 2022

News window

News around the world

Rajendra Balaji’s bank account Freezed by TN Police | இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, தன்னிடம் 3 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சாத்தூரைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் விருதுநகர் குற்றப்பிரவு காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்பையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறை விசராணை நடத்திய நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி (Rajendra Balaji) தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ALSO READ | ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ’செக்’..! லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டம்

இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதனால், தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை காவல்துறையினர் 9 நாட்களாக தேடி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அவர் வெளிநாடுகளுக்கு செல்லாத வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ள காவல்துறை, அடுத்தக்கட்டமாக ராஜேந்திர பாலாஜியின் பெயரில் இருக்கும் 6 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது. 

ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் காவல்துறை, தமிழகத்தில் சென்னை, திருச்சி, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் தேடி வருகின்றனர். இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருக்கும் நிலையில், அதற்கு தமிழக அரசு சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | ALSO READ | ’பண மோசடி மட்டுமல்ல.. இன்னும் இருக்கு’ ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link