November 28, 2021

News window

News around the world

Kovai Student Suicide case Update | கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12ம்  வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் அவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவி வீட்டிற்க்கு வந்த கோவை மாநகர துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் 
ஏற்கனவே மிதுன் சக்கரவர்த்தி மீது போடப்பட்ட வழக்கில் முதல்வர் மீரா ஜாக்சனும் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பபட்டுள்ளதாகவும்,
சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடிவருவதாகவும் தெரிவித்திருந்தார். 

ALSO READ | குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் : முதல்வர் ஸ்டாலின் உறுதி

இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ ஆகிய 2 பிரிவுகளின் கீழ் மீரா ஜாக்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து இன்று கோவை அழைத்துவரப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும், அத்துடன் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Source link