December 8, 2021

News window

News around the world

husband killed wife in Poonamallee, Police arrested husband | தாலியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; கணவனுக்கு போலீஸ் வலை

பூந்தமல்லி கிழக்கு மாட வீதி, ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவர் ஒரு வேன் டிரைவர் ஆவார். இவரது மனைவி நந்தினி (27), இவர்களுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் பண்ருட்டி. 

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இவர்கள் இந்த வீட்டின் மாடியில் வாடகைக்கு குடி வந்துள்ளனர். கீழ் வீட்டில் நந்தினியின் சகோதரி பவித்ரா என்பவர் குடியிருந்து வருகிறார். நேற்று இரவு நந்தினி மற்றும் குழந்தைகளை பவித்ரா கடைசியாக பார்த்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை வரை நந்தினி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. பல முறை அழைத்தும் வீட்டிற்குள் இருந்து எந்த வித பதிலும் இல்லை.

ALSO READ:பகீர் தகவல்! கொய்யாக்காய் தருவதாக ஏமாற்றி சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை..!! 

இதனால் சந்தேகம் அடைந்த பவித்ராவும் அக்கம், பக்கத்தினரும் பூந்தமல்லி போலீசாருக்கு (Police) தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நந்தினி தாலியால் கழுத்தை இறுக்கியும் கட்டையால் தாக்கியும் கொலை (Crime Incident) செய்யப்பட்டு கிடந்தார். 

இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 3 குழந்தைகளுடன் தலைமறைவான கணவன் ஆனந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை தாலிக்கயிற்றால் இறுக்கியும், உருட்டுக்கட்டையால் தாக்கியும் ஆனந்தராஜ் கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தலைமறைவாக உள்ள ஆனந்தராஜ் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:கோவையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி விற்க முயன்ற 3 பேர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link