December 8, 2021

News window

News around the world

Holidays for school and college in these districts due to continuous rain!

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது, அதிலும் குறிப்பாக சென்னையின் பல இடங்களும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்து வந்தது.  இதனால் சென்னை மற்றும்  சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

ALSO READ இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது.  அதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, ராமநாதபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

rain

அதனையடுத்து மழை குறைய தொடங்கியதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.  இந்நிலையில் மூன்றாவதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் கனமழை அதிகமாக இடைவிடாது பெய்து வருகிறது.  இதன் காரணமாக திருவாரூர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து தொடர் கனமழை காரணமாகவும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்தும்  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ Rain News: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை; திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link