November 28, 2021

News window

News around the world

Heavy rainfall predicted in these districts of Tamil Nadu | TN Weather Update: இந்த மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு, முழு விவரம் இதோ

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. குமரிக் கடல் பகுதியை ஒட்டி (1.5 கிலோமீட்டர் உயரம்வரை)  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. தேதி வாரியான வானிலை கணிப்புகளை காணலாம்: 

22.10.2021: மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர்,  திருவண்ணாமலை, பெரம்பலூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

23.10.2021: வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

24.10.2021: அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

25.10.2021, 26.10.2021 : மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

ALSO READ: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 

சென்னையை பொறுத்தவரை அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
அமராவதி அணை (திருப்பூர்) 10, செஞ்சி (விழுப்புரம்), அரவக்குறிச்சி (கரூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 7, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கன்னிமார் (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 6, வீரபாண்டி (தேனி), பரமத்திவேலூர் (நாமக்கல்), அரியலூர் (அரியலூர்), கே.பரமத்தி (கரூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 5, கோவில்பட்டி (தூத்துக்குடி), சேலம் (சேலம்), உத்தமபாளையம் (தேனி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 4, திருச்செங்கோடு (நாமக்கல்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), எடப்பாடி (சேலம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), பெரியார் (தேனி), பவானி (ஈரோடு), சூரலக்கோடு (கன்னியாகுமரி), கொடவாசல் (திருவாரூர்) கோவில்பட்டி (தூத்துக்குடி), ஈரோடு (ஈரோடு) தலா 3.

வில்லிவாக்கம் (திருவள்ளூர்), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பஞ்சப்பட்டி (கரூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), ராஜபாளையம் (விருதுநகர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) ), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), கொடுமுடி (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வட்டணம் (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), கயத்தார் (தூத்துக்குடி), சின்னக்கல்லார் (கோவை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) தலா 2, பெரம்பூர் (சென்னை), சித்தம்பட்டி (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்), மேல் பவானி (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), திருவாடை (ராமநாதபுரம்), பெருந்துறை (ஈரோடு), புலிப்பட்டி (மதுரை), நாங்குநேரி (திருநெல்வேலி), மாயனூர் (கரூர்) , வால்பாறை  (கோவை), தளவாடி (ஈரோடு), காரைக்குடி (சிவகங்கை), துவாக்குடி  (திருச்சி), கயத்தார்  (தூத்துக்குடி), கமுதி (ராமநாதபுரம்), தேவகோட்டை (சிவகங்கை), தூத்துக்குடி (தூத்துக்குடி), சோலையார் (கோயம்புத்தூர்), சிவகாசி (விருதுநகர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சை பாபநாசம்) புதுக்கோட்டை), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), கரூர் (கரூர்), வலங்கைமான் (திருவாரூர்), திருச்சுழி (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பொள்ளாச்சி (கோவை), கடலாடி (ராமநாதபுரம்), மேலூர் (மதுரை), பேராவூரணி (தஞ்சாவூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சங்கரிதுர்க் (சேலம்), பாண்டவையார் தலைவர் (திருவாரூர்), சிவகங்கை (சிவகங்கை), சேந்தமங்கலம் (நாமக்கல்), அரிமலம் (புதுக்கோட்டை), மண்டபம் (ராமநாதபுரம்) மல்லித்தூரம் மே. ), ஓமலூர் (சேலம்), மூலனூர் (திருப்பூர்), கூடலூர் (தேனி) தலா 1.

குறிப்பு : வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர்  ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

வானிலை குறித்த மேலும் விவரங்களுக்கு  imdchennai.gov.in என்ற  இணையதளத்தை பார்வையிடலாம். 

ALSO READ: Festival Offer: 50 காசுக்கு T-shirt விற்பனை! அலைமோதும் கூட்டம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

     

Source link