October 18, 2021

News window

News around the world

glenn maxwell: RCB vs SRH: டாஸ் வென்றது ஆர்சிபி…XI அணி இதுதான்: மெகா வெற்றியைப் பெறுமா கோலி படை? – rcb won the toss and opt to bowl first against srh in ipl 2021 52nd league

ஐபிஎல் 14ஆவது சீசன் 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிதான் அதிகமுறை வெற்றிபெற்றிருக்கிறது. இதனால், ஆர்சிபி வெற்றிபெற அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. மெகா வெற்றியைப் பெற்றால், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க உதவிக்கரமாக இருக்கும்.

டாஸ் வென்றப் பிறகு பேசிய விராட் கோலி, “முதலில் பந்துவீச விரும்புகிறோம். இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் ஒரு சில போட்டிகள் மட்டும் இருக்கம் நிலையில், சில அணிகளும் பிளே ஆஃபிற்கு செல்ல கடுமையாக போராடி வருகிறது. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு, இப்போட்டியில் வெற்றிபெற கடுமையாக முயற்சிப்போம். அணியில் மாற்றமில்லை” எனக் கூறினார்.

அடுத்துப் பேசிய கேன் வில்லியம்சன், “இது எங்களுக்கு சிறந்த வாய்ப்பு. சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இளம் வீரர்கள் குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அணியில் மாற்றம் இல்லை” எனத் தெரிவித்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவிலியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், யுஜ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கௌல், இம்ரான் மாலிக்.

Credit