January 29, 2022

News window

News around the world

Auto Driver arrested under POCSO Act for raping 16 year old girl | சிறுமி பாலியியல் பலாத்கார வழக்கு; ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 39 வயது மதிக்கதக்க பெண் சொந்த வீட்டில் தரைதளத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருவதாகவும், இவர்களது 16 வயது மகள் அயனாவரம் பகுதியில் பதினோராம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவியை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டின் மொட்டை மாடியில் விளையாட சென்ற போது வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் பெரியப்பா முறையான நாராயணன் (வயது 59)  என்பவர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து மிரட்டியுள்ளார். இதனை யாரிடமும் சொல்லாமலும், பேசாமலும் சிறுமி பயந்த நிலையில், சிறுமியின் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்ததால், அவரை சிகிச்சைக்காக கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சுமார் 5 நாட்கள் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். 

ALSO READ | சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில் நேற்று 9 ஆம் தேதி இரவு மேற்படி சிறுமி அவரது பெற்றோருடன் கடந்த 2015-ம் வருடம் தன்னிடம் பெரியப்பா பாலியல் சீண்டல் செய்ததை தெரிவிக்கவே இன்று 10-ஆம் தேதி காலை கொடுத்த புகாரில் ஆட்டோ ஓட்டுநர் நாராயணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியியல் துன்புருத்தல் சம்பவம் தொடர்பாக சிறுமி தற்போது கூறியதன் அடிப்படையில் புகார் அளித்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ | கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link