November 28, 2021

News window

News around the world

360: இயல் விருது!

‘கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பு வழங்கும் 2021-க்கான ‘இயல்’ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிதைக்கான விருது பெருந்தேவிக்கும், புனைவுக்கான விருது ‘இடபம்’ என்ற நாவலுக்காக பா.கண்மணிக்கும், இலக்கிய சாதனை சிறப்பு விருது கனடாவிலிருந்து வெளிவரும் ‘தாய்வீடு’ மாத இதழின் முதன்மை ஆசிரியர் பி.ஜெ.டிலிப்குமாருக்கும், பிறமொழி இலக்கிய விருது லோகதாசன் தர்மதுரைக்கும், தமிழ்த் தொண்டு விருது வீரகத்தி சுதர்ஷனுக்கும் வழங்கப்படுகிறது.

விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனடிய டாலர்கள் 500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) விருதுத் தொகையும் கேடயமும் வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 4-ம் தேதியன்று இந்தியா – இலங்கை நேரத்தின்படி இரவு 8.30 மணிக்கு இணைய வழியில் நடைபெறும். இதற்கான ஐடி: 811 4968 3360; பாஸ்வேர்டு: 078782. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!

Source link