November 28, 2021

News window

News around the world

ஹிமாச்சல் முதல்வராகிறார் அமைச்சர் அனுராக் தாக்குர்?| Dinamalar

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குரை, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஆண்டு, பா.ஜ., ஆளும் கர்நாடகா, உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் அடுத்தடுத்து முதல்வர்களை மாற்றி, பா.ஜ., தலைமை அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த இதர மாநில முதல்வர்கள், தங்களுக்கு மாற்றாக வேறு யாரையும் கட்சித் தலைமை தேர்வு செய்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

டில்லிக்கு சென்று, கட்சித் தலைவர்களை முதல்வர்கள் சந்தித்தால், அது முதல்வர் மாற்றம் குறித்து ஆலோசிப்பதற்கான சந்திப்பாகவே இருக்கும் என கட்சியினர் எண்ணுகின்றனர்.இந்நிலையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்குருக்கும் அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ., பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பா.ஜ., அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை மாற்றும் வகையில், முதல்வரை மாற்ற கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.மத்திய அமைச்சராக உள்ள அனுராக் தாக்குரை மாநில முதல்வராக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வாரம் இறுதியில் டில்லிக்கு சென்று பா.ஜ., தலைவர்களை முதல்வர் ஜெய்ராம் தாக்குர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யவே, கட்சித் தலைமையை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. – புதுடில்லி நிருபர் –

Advertisement

Source link