December 8, 2021

News window

News around the world

விழிப்புடன் பணி: பழனிசாமி அறிவுரை| Dinamalar

ஓமலுார் :”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விழிப்புடன் பணிபுரிய வேண்டும்,” என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார்.சேலம் மாவட்டம், ஓமலுார், கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

அதில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:ஜனவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியை, இப்போதே துவக்க வேண்டும். இத்தேர்தலில் வென்றால் தான், மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தர முடியும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைப்பர். நாம் விழிப்போடு பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர்
பேசினார்.

Advertisement

Source link