December 9, 2021

News window

News around the world

வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி மாநிலங்களுக்கு மத்திய மந்திரி உத்தரவு| Dinamalar

புதுடில்லி :”வயது வந்தோர் அனை வருக்கும் முதல் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு ‘ஹர் கர் தஸ்தக்’ என்ற பெயரில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை நடத்தி வருகிறது.


நீங்கவில்லை

இந்நிலையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்தது. இதில் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:கொரோனா அபாயம் இன்னும் நீங்கவில்லை. பிரிட்டன், சிங்கப்பூர், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்துஉள்ளது. அதனால், நாம் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவதுடன், நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.நாட்டில் தற்போது, 12 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது நடக்கும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தில், வயது வந்தோர் அனைவருக்கும் முதல் தடுப்பூசி போட, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பஸ், ரயில் நிலையங்கள், ஆட்டோ ‘ஸ்டாண்டு’கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்களை நடத்த வேண்டும். வர்த்தகர்கள், நடைபாதை வியாபாரிகள், கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என, ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி போட ஒரு நாள் ஒதுக்கினால், விரைவாக பணிகள் முடிவடையும்.

பாராட்டு

உள்ளூர் மத தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோருடன் இணைந்து, கிராமங்கள் மற்றும் புறநகரங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி வினியோகத்தில் மத்திய அரசு அளித்து வரும் ஆதரவுக்கு, மாநில சுகாதார அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். மாநிலங்கள் சிறப்பான முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, மாண்டவியா பாராட்டு தெரிவித்தார்.

Advertisement

Source link