December 9, 2021

News window

News around the world

ரிசர்வ் வங்கியின் இரு திட்டங்கள் இன்று துவக்குகிறார் பிரதமர் மோடி| Dinamalar

புதுடில்லி :ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சார்ந்த இரு திட்டங்களை, பிரதமர் மோடி இன்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைக்கிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘ஆர்.பி.ஐ., ரீடெய்ல் டைரக்ட் ஸ்கீம்’ மற்றும் வங்கி வாடிக்கையாளர்களின் குறைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும், ‘மத்தியஸ்த தீர்ப்பாயம்’ என்ற இரு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

latest tamil news

ஆர்.பி.ஐ., ரீடெய்ல் டைரக்ட் திட்டத்தில், சில்லரை முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் வாயிலாக, மத்திய – மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களை தரகு கட்டணமுன்றி வாங்கலாம்.
இதனால், சிறு முதலீட்டாளர்களும் சுலபமாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.மத்திய அரசு, ‘ஒரே தேசம் – ஒரே மத்தியஸ்த தீர்ப்பாயம்’ என்ற கொள்கைப்படி ஒரே வலைதளம், ஒரே மின்னஞ்சல், ஒரே முகவரியில் வங்கி வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கும் வசதியை
ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி மத்தியஸ்த தீர்ப்பாயம் என்ற மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் குறை தீர்க்கும் திட்டத்தையும் மோடி துவக்கி வைக்கிறார். இதனால், ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும், தங்கள் குறைகளை ஒருங்கிணைந்த ஒரே வலைதளத்தில் தெரிவித்து, தீர்வு காணும் வசதி கிடைக்கும்.
மேலும், இரு மொழிகளில் புகார் தெரிவிப்பதற்கான உதவியும், குறை தீர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் பெற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் மோடி அறிமுகப்படுத்த உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Source link