October 20, 2021

News window

News around the world

மின்சார கார் தயாரிக்க டெஸ்லா நிறுவனத்திற்கு கட்கரி அழைப்பு| Dinamalar

புதுடில்லி-இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க வரும்படி அமெரிக்காவைச் சேர்ந்த, டெஸ்லா நிறுவனத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

latest tamil news

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், மின்சார கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.உறுதிஇந்நிலையில் டில்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார், டெஸ்லாவின் மின்சார காரை விட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. இருந்த போதிலும் சீனாவில் தொழிற்சாலை அமைத்து மின்சார கார் தயாரிப்பது போல, இந்தியாவிலும் மின்சார கார் தயாரிக்க வரும்படி டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

தொழிற்சாலை அமைக்க தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்துள்ளேன். டெஸ்லா, இந்திய நிறுவனங்களிடம் இருந்து கார் உதிரி பாகங்களை வாங்குகிறது. அதனால் இங்கேயே மின்சார கார் தயாரிப்பை துவக்குவது, டெஸ்லாவுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு துவங்கியுள்ள நிலையில் டெஸ்லா இங்கு தொழிற்சாலை அமைத்தால் ஏற்றுமதியும் செய்யலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

latest tamil news

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 40 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட காருக்கு, 60 – 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. டெஸ்லா, சீனாவில் இருந்து மின்சார காரை இறக்குமதி செய்து விற்க திட்டமிட்டுள்ளது. கோரிக்கைஅதனால் கார் இறக்குமதிக்கான சுங்க வரியை 40 சதவீதமாக குறைக்கும்படி டெஸ்லா கோரிக்கை விடுத்துள்ளது. ‘முதலில் இந்தியாவில் கார் தயாரிப்பை துவக்கிய பின், வரி குறைப்பு பற்றி பரிசீலிக்கலாம்’ என, மத்திய அரசு டெஸ்லாவிடம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையால் டெஸ்லா, இந்தியாவுக்கு வருவது தாமதமாகிறது. எனினும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார கார் வினியோக மையங்களை டெஸ்லா அமைத்து வருகிறது.

Advertisement

Source link