December 8, 2021

News window

News around the world

மாணிக் தாகூர் மீது சோனியா அதிருப்தி| Dinamalar

தெலுங்கானாவில், இடைத்தேர்தல் தோல்வியால், மாநில காங்., கட்சியின் பொறுப்பாளர் மாணிக் தாகூர் மீது கட்சித் தலைவர் சோனியா அதிருப்தியில் உள்ளார்.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இங்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஹுசூராபாத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் எட்டேலா ராஜேந்தர், 23 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதில், 83 ஆயிரம் ஓட்டுகளுடன் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஸ்ரீநிவாஸ் யாதவ் இரண்டாம் இடத்தை பிடித்தார். காங்., வேட்பாளரான நர்சிங் ராவ் வெறும் 3,012 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.வெற்றிபெற்ற எட்டேலா ராஜேந்தர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து, தன் சொந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்தர், பா.ஜ.,வில் இணைவதற்கு முன், காங்., கட்சியில் இணைய விரும்பியதாகவும், மாநில காங்.,கின் முன்னாள் தலைவர் அதை முறையாக கையாளவில்லை என்றும் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
இதனால், கட்சியை முறையாக வழிநடத்த தவறிய மாநில காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் கட்சியின் மாநில பொறுப்பாளர் மாணிக் தாகூர் மீதும், காங்., தலைவர் சோனியாவும் ராகுலும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இடைத்தேர்தல் தோல்வி குறித்து ரேவந்த் ரெட்டி மற்றும் மாணிக் தாகூருடன் ஆலோசிக்க, சோனியா முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் செய்து வருகிறார்.
மாணிக் தாகூர் தமிழகத்தின் விருதுநகர் தொகுதி எம்.பி.,யாக உள்ளது குறிப்பிடத்தக்கது. — புதுடில்லி நிருபர் –

Advertisement

Source link