November 28, 2021

News window

News around the world

மனைவியின் தூண்டுதலால் ஐந்தாவது கணவனை கொலை செய்த ஆறாவது கணவன்!

சேலம் : படத்தில் பார்க்கும் பல காட்சிகளும் தற்போது உண்மை வாழ்க்கையில் நடந்து கொண்டு வருகிறது.  அறிவியல் வளர்ச்சியை காட்டிலும் தற்போது அதிகரித்து இருப்பது கள்ள காதல் வளர்ச்சி தான்.  நாளுக்கு நாள் கள்ள காதல் தொடர்பான பிரச்சனை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மருதமலை’ படத்தில் காவல் நிலையத்தில் வரும் காமெடி காட்சி ஒன்றில், வடிவேலு போலீசாக இருப்பார், கல்யாண கோலத்தில் ஒரு பெண் அரக்கப்பரக்க ஓடி வந்து எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறுவார்.  அப்போது திடீரென ஒருவர் வருவார், யாரென்று கேட்டால் அந்த பெண்ணின் கணவன் என்று கூறுவார்.  அதனை தொடர்ந்து வரிசையாக 3 பேர் வந்து நாங்களும் அந்த பெண்ணின் கணவர் என்று கூறுவார்கள்.  இறுதியாக மற்றொருவர் வந்து நான்தான் இவளின் முதல் கணவன் என்று கூடி செல்வார்.

ALSO READ திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் மீது ஆசிட் வீசிய பெண்!

இந்த காமெடியை போல் ஒரு நிகழ்வு சேலத்தில் நடந்துள்ளது, அனால் அங்கு நடந்ததோ காமெடி இல்லை, வேறு.  சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டினத்தை சேர்ந்தவர் அழகம்மாள்(40). இவருக்கு சரவணன் என்பவருடன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளது.  கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர் சரவணனை பிரிந்து, தன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.  அங்கு இவர் ஒரு கூலி வேலைக்கு சென்றபோது, மரம் அறுக்கும் தொழிலாளி ஆறுமுகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சில காலங்கள் குடும்பம் நடத்தினார்.  பின்னர் இவர்கள் இருவருக்கும் சில பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அழகம்மாள் ஆறுமுகத்தை பிரிந்து சென்றார்.  அதன் பிறகு வேலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, குடும்ப வாழ்க்கை நடத்தி அதுவும் கசந்து போக வேலுவை பிரிந்தார்.

பின்னர் சிறிது நாட்கள் கழித்து விக்கி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, அந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது.  அதனையடுத்து மேட்டூர் அருகேயுள்ள புதூர் பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான செல்லவேல்(36) என்பவருடன் அழகம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து செல்லவேலுவுடன் சென்று அழகம்மாள் குடும்பம் நடத்தி வந்தார்.  அப்போது செல்லவேலு ஓட்டும் லாரியில் கிளீனராக வேலை செய்யும் 17 வயது பையனுடன் அழகம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இது தகாத உறவாக மாறிய நிலையில், அழகம்மாள் சிறுவனுடன் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளார்.  இவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை செல்லவேலு ஒருமுறை நேரில் பார்த்துவிட்டு பிரச்சனை செய்தார்.

இதனை தொடர்ந்து அழகம்மாளும், அந்த சிறுவனும் செல்லவேலுவை தீர்த்து காட்டினாள் தான் நாம் நிம்மதியாக ஒன்றாக வாழமுடியும், அதனால் அவனை கொலை செய்து விடுவோம் என்று திட்டம் தீட்டினர்.  செல்லவேலு மேல் காவிரி க்ராஸ் பகுதியில் கால்வாய் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இவரை இடைமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டனர்.  இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் கொலையாளி தப்பித்து ஓடிவிட்டான்.  இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இதுகுறித்து மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் செல்லவேலுவை கொலை செய்தது கிளீனராக வேலை பார்த்த சிறுவன் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, வீட்டில் இருந்த சிறுவனை அதிரடியாக கைது செய்த போலீசார் சேலம் கூர்நோக்கு இல்லத்தில் வைத்துள்ளனர்.  மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ துபாய் பேஷன் ஷோவில் பங்குபெற போகும் தமிழகத்தை சேர்ந்த 6 வயது சிறுவன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link