October 18, 2021

News window

News around the world

மண்ணில் புதைந்த நாய்குட்டிகள்: அபய குரல் எழுப்பி அழைத்த தாய்

பாலக்காடு : ‘தன் குட்டிகள் மண்ணில் புதைந்து விட்டன’ என, இடைவிடாமல் அபய குரல் எழுப்பி அப்பகுதியில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்த தாய் நாயின் பாசப்போராட்டத்தை பார்த்து பொது மக்கள் கண் கலங்கினர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா அருகே உள்ள கப்பூர் காஞ்சிரதாணியில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இங்கு அஷ்ரப் என்பவரின் வீட்டின் அருகே மேடான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.இச்சம்பவத்தில், மண் மேட்டில் அமர்ந்திருந்த வீதியில் சுற்றித்திரியும் நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்தன. இதை யாரும் கவனிக்கவில்லை.

latest tamil news

இதில், தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்த நிலையில், தலைப்பகுதி மட்டும் வெளியில் நீட்டிகொண்டிருந்தது. தன்னுடன் பாசத்துடன் அமர்ந்திருந்த தன் குட்டிகள் காணாததை கண்ட நாய், பாசப்போராட்டத்துடன் இடைவிடாமல் ‘அபய குரல்’ எழுப்பி மக்களை அழைத்தது. தாய் நாயின் இடைவிடாத சப்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த மக்கள் மண்ணில் புதைந்து தவித்த நாயை காப்பாற்றினர். அதன் பின் தான் தெரிந்தது. அந்த நாயுடன் ஆறு குட்டி நாய்கள் மண்ணில் புதைந்திருப்பது.

latest tamil news

அந்த தாய் நாய் இடைவிடாமல் அபயகுரல் எழுப்பியது. தன் குட்டிகளை காப்பாற்றுவதற்காக என தெரிந்து கண்கலங்கினர். ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டதிற்குப்பின் மண் சரிவை அப்புறப்படுத்தி இரண்டு குட்டி நாய்களை உயிருடன் மீட்டனர். நான்கு நாய் குட்டிகள் மண்ணில் புதைந்து பலியானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ செய்துள்ளது.

Advertisement

Source link