December 9, 2021

News window

News around the world

மக்கள் விழிப்புணர்வு பிரசாரம்: காங்., தீவிரம்| Dinamalar

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக வைத்து, வரும் 14ம் தேதி முதல் மத்திய அரசிற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்., பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடிப்பத் தேவைகள் உட்பட அனைத்து விஷயங்களிலும், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளில் உள்ள தோல்விகளே காரணம்.காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை விண்ணை நோக்கி செல்கிறது. இதன்வாயிலாக மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது உறுதியாகிறது. இதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள காங்., முடிவு செய்துள்ளது.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் பாதயாத்திரை, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும். இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் 14ம் தேதி துவங்கி, 29 ம் தேதி முடிவுக்கு வரும். அடுத்ததாக, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.அப்போது மக்கள் பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் திரண்டு, இரு அவைகளிலும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார் – நமது டில்லி நிருபர் –

Advertisement

Source link