October 20, 2021

News window

News around the world

மகாளய அமாவாசை 2021: தர்ப்பணம் தர தடையால் வெறிச்சோடிய அம்மா மண்டபம் – தடையை மீறி காவிரியில் நீராடினர் | Mahalaya Amavasya 2021: Thaphanam Prohibition – Deserted look in Amma Mandapam

செய்திகள்

ஒய்-ஜெயலட்சுமி சி

வெளியிடப்பட்டது: புதன், அக்டோபர் 6, 2021, 13:30 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

திருச்சி: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் திதி தர்ப்பணம் அளிக்க தடை விதிக்கப்பட்டதால் அந்த பகுதியே வெறிச்சோடி கணப்பட்டது. அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபம், அய்யாளம்மன் படித்துறை மற்றும் முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

  விவசாயிகள் படுகொலை: லக்னோ விமானத்தில் ராகுல் காந்தி, பூபேஷ் பாகல், சரண்ஜித்சிங்- தடையை மீற முடிவு! விவசாயிகள் படுகொலை: லக்னோ விமானத்தில் ராகுல் காந்தி, பூபேஷ் பாகல், சரண்ஜித்சிங்- தடையை மீற முடிவு!

மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை காய்கறிகளை தானமாக கொடுக்க வேண்டும். தரமான பச்சரிசி, 1 ரூபாய் காசு 11, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, உப்பு சிறிய பொட்டலம், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளாய அமாவாசையாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில்நீர் நிலைகளில் புனித நீராடி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

அமாவாசை தர்ப்பணம் தர தடை

அமாவாசை தர்ப்பணம் தர தடை

முன்னோர்கள் நினைவாக நீர் நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களில் தர்ப்பணம் கொடுக்கவும், தரிசனம் செய்யவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளாய அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு செல்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதி தடுப்பு கட்டைகள் கொண்டு மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மக்கள் ஏமாற்றம்

மக்கள் ஏமாற்றம்

தடை விதிப்பு குறித்த தகவல் அறியாத பலர் அதிகாலையிலேயே அம்மா மண்டபம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் போலீசாரிடம் வேண்டுகோளாக கேட்டும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் எள், அரிசி மாவுடன் சேர்த்த பிண்டங்களை அருகில் உள்ள குழாய்களில் கரைத்து விட்டு வீடு திரும்பினர்.

காவிரிக்கரையோரங்களில் தர்ப்பணம்

காவிரிக்கரையோரங்களில் தர்ப்பணம்

இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபம், அய்யாளம்மன் படித்துறை மற்றும் முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் திருச்சி மாவட்டத்தில் முசிறி, தொட்டியம், கரூர் மாவட்டத்தில் நொய்யல், வேலாயுதம்பாளையம், நெரூர், வாங்கல், குளித்தலை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கரையோரங்களில் திரண்ட பொதுமக்கள் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

புனித நீராடிய மக்கள்

புனித நீராடிய மக்கள்

தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் புதன்கிழமை காலை பொதுமக்கள் யாருமின்றி அம்மா மண்டபம் வெறிச் சோடிக் காணப்பட்டது. வெளியூர்களில் வந்த ஒரு சிலரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். காவிரிக்கரைகளிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட பொதுமக்கள் கூடுவதை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், காவிரக் கரையில் காவல்துறையினர் இல்லாத பகுதிகளில் ஒரு சிலர் தர்ப்பணம் கொடுத்து, காவிரியில் குளித்து முன்னோர்களை வழிபட்டுச் சென்றனர்.

மகாளய அமாவாசை தினம்

மகாளய அமாவாசை தினம்

கொரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்ட காவிரிக்கரை. வழக்கமாக மகாளய அமாவாசை என்றால் காவிரிக் கரையின் இருபுறமும் உள்ள படித்துறைகள், அம்மா மண்டபம், அய்யாளம்மன் மண்டபம், கீதாபுரம், கம்பரசம்பேட்டை, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். கரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மாரியம்மன் கோவில்

மாரியம்மன் கோவில்

மகாளாய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று காலை அமாவாசை நாளில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட்னர்.

ஆங்கில சுருக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் திதி தர்ப்பணம் தடை செய்யப்பட்டதால் ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபம், அய்யாளம்மன் படிக்கட்டு மற்றும் முசிறி, தொட்டியம் மற்றும் துறையூர் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டு, போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கதை முதலில் வெளியிடப்பட்டது: புதன், அக்டோபர் 6, 2021, 13:30 [IST]

Source by [author_name]