November 28, 2021

News window

News around the world

பெப்பே காட்டும் தமிழக அரசு!| Dinamalar

‘பெப்பே’ காட்டும் தமிழக அரசு!

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக, பெட்ரோல் விலையை 1 லி.,க்கு 5 ரூபாயும்; டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, மத்திய அரசு.

latest tamil news

தற்போது பெட்ரோல் விலை 106 ரூபாயில் இருந்து, 101 ரூபாயாக குறைந்து உள்ளது; டீசல் விலை 102 ரூபாயில் இருந்து 92 ரூபாயாகக் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால், புதுச்சேரி உட்பட சில மாநில அரசுகள் தங்களது வரியைகுறைத்துள்ளன;

இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்துள்ளது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசலில் 4 ரூபாயும் குறைக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டது. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் மட்டுமே குறைத்தது; டீசல் விலையை குறைக்கவில்லை.

‘பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்’ என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின; இதோ இப்போது, மத்திய பா.ஜ., அரசு குறைத்து விட்டது.ஆனால் சொன்னதை செய்யாத தி.மு.க., அரசை எதிர்த்து, காங்கிரஸ், கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்துமா? செய்யாது;

ஏனெனில் அக்கட்சிகளுக்கு, மக்கள் நலனை விட, அதிகாரத்தில் இருப்போரின் தயவு தான் தேவை!’ சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்; சொல்லாததையும் செய்வோம்’ என கலர் கலராக, ‘ரீல்’ விடுவதில் தி.மு.க.,வினர் அசகாய சூரர்கள்!

latest tamil news

சொன்னதை ஏன் செய்யவில்லை எனக் கேட்டால், ‘வாக்குறுதி நிறைவேற்ற தேதி குறிப்பிட்டோமா?’ என திருப்பி கேட்டு நம்மை முட்டாளாக்குவர், தி.மு.க., அமைச்சர்கள்.’விடியல் வரும்’ என நம்பியோருக்கு, ‘பெப்பே’ காட்டுகிறது தி.மு.க., அரசு!

Source link