October 18, 2021

News window

News around the world

பெண் அதிகாரியிடம் பரிசோதனை? விமானப்படை தளபதி மறுப்பு!| Dinamalar

புதுடில்லி:”கோவையில், சக அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரியிடம், அதற்கான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை,” என, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறினார்.

விமானப்படையின் 89ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி பேசியதாவது:’ரபேல்’ போர் விமானங்களும், ‘அபாச்சி’ ரக ஹெலிகாப்டர்களும் சேர்க்கப்பட்டபின் விமானப்படை மிகவும் பலம் அடைந்துள்ளது.

தயார் நிலை

எதிரி நாடுகளின் எந்த சவாலையும், மிரட்டலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது. மேலும் ராணுவத்தின் மற்ற இருபிரிவுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் விமானப்படை ஆர்வமாக உள்ளது. மூன்று பிரிவுகளும் இணைந்து செயல்பட்டு பயிற்சி மேற்கொள்வது, ராணுவத்தின் பலத்தை பெரிதும் அதிகரித்துஉள்ளது. எல்லைக் கோட்டின் திபெத் பகுதியில் உள்ள மூன்று விமானப்படை தளங்களிலும் சீனா படைகளை குவித்துள்ளது. நம் விமானப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள விமானப்படை தளங்கள் பற்றி கவலைப்படதேவையில்லை. ஏனெனில் அவற்றில் ஐந்து அல்லது ஆறு ஹெலிகாப்டர்களுக்கு மேல் நிறுத்த முடியாது.

நடவடிக்கை

பாகிஸ்தான் – சீனா நட்புறவு பற்றியும் அச்சப்பட தேவையில்லை. இதனால் ஏற்படும் சவால்களை முடியடிக்கும் திறமை நம் ராணுவத்திடம் உள்ளது. விமானப்படைக்கு தேவையான இலகு ரக ஹெலிகாப்டர்கள், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்களை, இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘மிக் ௨௧’ ரக போர் விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானது உண்மை தான். ஆனால் இப்போது, மிக் ௨௧ ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது குறைந்துள்ளது. அனைத்து போர் விமானங்களையும் பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவையில் சக அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் விமானப்படை பெண் அதிகாரியிடம், அதற்கான பரிசோதனை செய்யப்பட்டதாக வெளியான அறிக்கை தவறு.

பரிசோதனை

அவரிடம் எந்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. இது போன்ற சம்பவங்களுக்கு இந்திய விமானப்படை சட்டங்கள் கடுமையாக உள்ளன. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link