December 9, 2021

News window

News around the world

புதிய புயல் சின்னம் தப்புமா தமிழகம்?| Dinamalar

சென்னை :வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று கரையை கடந்த நிலையில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், தமிழகம் தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கக்கடலில், ௯ம் தேதி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், அதி கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னையில் கரையை கடந்தது.
இந்நிலையில், வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த பகுதி, நாளை அந்தமான் அருகே உருவாகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் ஆந்திர கடற்பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுஉள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதாவது புயல் சின்னமாக கரை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் என அடுத்தடுத்து ஏற்பட்ட மழை கொட்டுவதால், வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகம் தப்புமா; சிக்குமா என மக்கள் கவலையில் உள்ளனர்.

Advertisement

Source link