January 29, 2022

News window

News around the world

பிராக்டிகல் நோட்டுக்கு அட்டை போடாம வந்தா.. உன் மார்க்குக்கு நான் பொறுப்பு கிடையாது பார்த்துக்கோ! | Funny memes collection on school students and teacher.

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பிரச்சினையால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பின்னாளில் நினைத்துப் பார்த்து, நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியான நாட்களாக பள்ளி நாட்கள் இருந்தாலும்கூட, அந்த சமயத்தில் அதாவது பள்ளியில் பயிலும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு அது சோதனையான காலம் தான். நண்பர்களைப் பார்க்கலாம், ஜாலியாக கதை பேசலாம் என பள்ளிப் பருவத்தின் மகிழ்ச்சியான பக்கங்களைப் போலவே, வீட்டுப்பாடம் எழுதுவது, ஆசிரியர்களின் கண்டிப்பு, தேர்வுகள் என பயப்பட வைக்கும் அம்சங்களும் அதிகம்.

கல்லூரி காலகட்டத்தில்கூட பேராசியர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் சில மாணவர்களுக்கு வந்து விடும். ஆனால் பள்ளியில் படிக்கும் போது நிலைமை அப்படியில்லை. அதனால்தான் இப்போதும் நமது பள்ளி ஆசிரியர்களைப் பார்த்தால், மரியாதையும், பயமும் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

ஆனால் என்னதான் பயம் இருந்தாலும் சில குறும்புக்கார மாணவர்கள் தேர்வில் தங்களது கதையெழுதும் திறமையையெல்லாம் காட்டி ஆசிரியரை தலை சுற்ற வைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றிய மீம்ஸ்கள் தான் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அவற்றில் சுவாரஸ்யமான சில மீம்ஸ்கள் உங்களுக்காக…

Funny memes collection on school students and teacher.

English summary

These are some jolly memes collection on school students and teachers.

Story first published: Monday, January 3, 2022, 17:38 [IST]

Source link