November 28, 2021

News window

News around the world

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 30 மாணவர்கள் விடுவிப்பு| Dinamalar

லாகோஸ்-நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 30 கல்லுாரி மாணவர்கள் நான்கு மாதத்துக்கு பின் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

latest tamil news

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில், 70 மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அடுத்த சில நாட்களில் ஆறு மாணவர்கள் மீட்கப்பட்டனர். ஒரு மாணவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்தது.

இந்நிலையில் நேற்று 30 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் எவ்வாறு மீட்கப்படனர் என்ற விபரத்தை அரசு வெளியிடவில்லை. மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணி தொடர்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

latest tamil news

‘இந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 1,400 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்; அதில் 200 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை’ என, யுனிசெப் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Source link