October 18, 2021

News window

News around the world

நிலக்கரி தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் டில்லி?| Dinamalar

புதுடில்லி:”கையிருப்பில் இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. உடனடியாக நிலக்கரி கிடைக்காவிட்டால், டில்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது,” என, டில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. நாடு முழுதும் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, போதிய நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி குறைந்து உள்ளது. கடும் மின் தடையை சந்திக்க நேரிடும் நிலையில் உள்ளதாக தமிழகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே கூறியுள்ளன.

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ள டில்லியும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.டில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளதாவது:டில்லிக்கு தேவையானன மின்சாரத்தை தயாரிக்கும் நிலையங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

உடனடியாக நிலக்கரி வினியோகம் செய்யப்படாவிட்டால் டில்லி இருளில் மூழ்கும் நிலை ஏற்படும்.இந்தப் பிரச்னை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா பரவல் இருந்தபோது ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுபோல். தற்போது நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரச்னையை உருவாக்கி. அதற்கு தாங்கள் தான் தீர்வு கண்டதாக விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் கூறியுள்ளன.

Advertisement

Source link

You may have missed