October 19, 2021

News window

News around the world

தடுப்பூசி டோஸ் 100 கோடியை விரைவில் எட்டும்| Dinamalar

புதுடில்லி:கொரோனா தடுப்பூசி பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டில்லியில் நடந்தது. இதில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், மாநிலங்களின் தேசிய சுகாதார திட்ட முதன்மை செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேற்று மட்டும் இரவு 7:00 மணி வரை, 65 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் வாயிலாக இதுவரையில் செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த டோஸ் 94.60 கோடியை கடந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:நாட்டில் இதுவரை செலுத்திய தடுப்பூசி ‘டோஸ்’ எண்ணிக்கை 94.60 கோடியை கடந்துள்ளது.

ஒருசில நாட்களில் அது 100 கோடியை எட்டும். இந்த மைல்கல்லை நாம் மிக விரைவாக அடைந்துள்ளோம்.பண்டிகை மற்றும் திருவிழாக்களின்போது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link