December 9, 2021

News window

News around the world

தக்காளி விக்கிற விலைக்கு லோன் வாங்கிதான் ரசம் வக்கணும் போலயே.. தெறிக்கும் Memes | Netisans shared their comments on Tomato price hike

சென்னை: தமிழகத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அது தொடர்பாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

கனமழையால் தக்காளி செடிகள் பாதிப்படைந்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி ஒரு கிலோ ரூ 130 முதல் 150 வரை விற்கிறது.

இதனால் தக்காளி வாங்கவே மக்கள் யோசிக்கிறார்கள், பெட்ரோல் டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ 100 விற்கப்படுவதால் தக்காளி வாங்கும் காசில் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம் என மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள். இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source link