October 28, 2021

News window

News around the world

டில்லியில் புதிதாக தமிழ்நாடு இல்லம் ரூபாய் 200 கோடியில் கட்ட திட்டம்

டில்லி சாணக்யபுரியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை இடித்து விட்டு, அதே இடத்தில், 200 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் புதிதாக தமிழ்நாடு இல்லம் கட்டப்பட உள்ளதாக, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.


ஆலோசனை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, டில்லி சாணக்கியபுரியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறியதாவது: டில்லியில், 50 ஆண்டு களை கடந்த கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்ற விதி உள்ளதால், தற்போதுள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில், 2௦௦ கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் தங்கும் அறைகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும்.

கோரிக்கை

இந்த இடத்தில், 2 லட்சத்து 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக இல்லம் கட்டப்படும். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, விரைவில் முதல்வர் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின், மீண்டும் அளித்த பேட்டி: சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே, இரண்டடுக்கு பாலமாக அமைக்கப்படும் உயர்மட்ட சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். மதுரை, கோவை நகரங்களில் மூன்று இடங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மும்பையில் இருப்பதை போலவே துறைமுகம் – திருவொற்றியூர் இடையே கடல்வழியாக பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனு மத்திய அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link