October 20, 2021

News window

News around the world

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை :’நீட்’ தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தக் கோரி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, தி.மு.க., – எம்.பி., – டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வழங்கினார்.
தி.மு.க., தலைமை அறிக்கை:மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தை தி.மு.க., செய்தி தொடர்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், 6ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினார். அவரை தொடர்ந்து, நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து இளங்கோவன் கடிதத்தை வழங்கினார். கடிதத்துடன் நீட் தேர்வு குறித்து, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த பரிந்துரைகளையும் இணைத்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Source link