December 8, 2021

News window

News around the world

சென்னை உஷ்ஷ்ஷ்! பன்னீருக்கு ரெட் அலெர்ட்| Dinamalar

பன்னீருக்கு ‘ரெட் அலெர்ட்’

சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க, பா.ஜ., மேலிடத்திற்கு துளியும் விருப்பமில்லை என தெரிய வந்துள்ளது.

latest tamil news

இது பற்றி, பா.ஜ., டில்லி வட்டாரம் கூறுகையில், ‘அவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர். தொண்டர்களின் செல்வாக்கை இழந்தவர். அவரது குடும்பத்தினர் வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். சசிகலாவுக்கு பன்னீர்செல்வம் ஆதரவு அளிப்பது நல்லதல்ல’ என்றும் எச்சரித்திருக்கிறது.

இல்லையென்றால், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமி பின்னால் இருப்பதால், இரட்டை இலை சின்னம் அவருக்கு போய் விடும்; அ.தி.மு.க.,வுக்கு ஒற்றை தலைமை உருவாக்கப்பட்டு விடும் என்றும், பா.ஜ., தரப்பில் பன்னீருக்கு வேப்பிலை அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, சசிகலா விவகாரத்தில் உஷாராக செயல்படும்படி பன்னீர்செல்வத்திடம், அவர் மீது அக்கறை உள்ள பா.ஜ., தமிழக தலைவர் ஒருவர் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

எப்படி சமாளிப்பார் எம்.பி.,?

மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் தேர்தல் நேரத்தில், ‘முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பாடுபடுவேன்’ என்று சொல்லி ஓட்டுக் கேட்டார்.

latest tamil news

தற்போது, அணையின் நீர்மட்டம், 136 அடியாக இருந்தபோதே, தமிழக அரசு அனுமதியோடு கேரள அரசு தண்ணீரை திறந்து விட்டது. தி.மு.க., அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பா.ஜ., — அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

அப்போது, மதுரை எம்.பி.,யான வெங்கடேசனை எதிர்த்தும் கோஷம் எழுப்பினர். ‘முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பாடுபடுவேன் என்று சொன்ன எம்.பி., நீர்மட்டத்தை உயர்த்தாமல், தண்ணீர் திறந்தது குறித்து கேள்வி கேட்காமல் எங்கே போனார்; என்ன பதில் சொல்வார்;

கேரளாவில் கம்யூ., ஆட்சியில் இருப்பதால் பம்மி விட்டாரா’ என, கேள்வி எழுப்பினர். இதனால், தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயம், எம்.பி., வெங்கடேசனுக்கு ஏற்பட்டுள்ளது; என்ன சொல்லி சமாளிப்பாரோ?

அமைச்சர் பெயரில் அதிகாரி ஆட்டம்!

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், அரசின் திட்டங்களுக்காக, நிறைய கணக்குகள் வங்கிகளில் துவக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பல திட்டப் பணிகள், ஆண்டுகள் பல கடந்தும் நடக்கவில்லை; திட்டத்திற்கு ஒதுக்கிய பணமும் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. இதையறிந்த நிதி அமைச்சர் தியாகராஜன், அவற்றை அரசு கஜானாவிற்கு மாற்ற, ஒரு குழுவை நியமித்தார்.

இந்த குழுவில், திருவள்ளூரை சேர்ந்த தணிக்கை அதிகாரி ஒருவர் உறுப்பினராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே, ஏகப்பட்ட புகார்கள். இவரது அடாவடி வசூல் குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ‘நோட்டீஸ்’ போட்டு போராட்டம் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளனர்.

இவரை குழுவில் சேர்த்தது, மற்ற அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த அதிகாரி, நிதி அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி அட்டகாசம் செய்கிறாராம். இவரால் பாதிக்கப்பட்டவர்கள், அலகு குத்தி பழநி முருகனிடம் வேண்டாத குறையாக புலம்புகின்றனர்.

Source link