December 8, 2021

News window

News around the world

சென்னையில் விடாது பெய்யும் தொடர் மழை; வீடுகளுக்குள் மழை தண்ணீர்; மக்கள் அவதி| Dinamalar

சென்னை: சென்னையின் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்லத்தின் காரணமாக சென்னையில் மாலை பெய்த கனமழை தற்போது நள்ளிரவு வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

latest tamil news

சென்னையில் மழை பெய்யும் இடங்கள்

தி.நகர், கோடம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, , ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கீழ்க்கட்டளை, ஆதம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த சிலநாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் குடியுருப்புகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்லமுடியாத அவல நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வீடுகளினுள் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளது. அதனை வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

தி.நகர், மேற்கு மாம்பலம் பகுதிகளில் சாலையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அசோக் நகர், அடையாறு, கொருக்குப்பேட்டையில் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. மழையால் சென்னை பெருநகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு படையினர்

இன்று(நவ.,11) காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்பதால், மழையால் பாதிப்படைந்தோருக்கு உதவி செய்வதற்காக
மூன்று பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி, ராட்சத மோட்டார் மூலமாக தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் நீர் தேக்கம் அப்படியே உள்ளது. இதுதவிர சென்னையின் அரங்கநாதன் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலூம் பல இடங்களில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

8 விமான சேவைகள் ரத்து

சென்னையில் இருந்து புறப்படவிருந்த 4 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்கள் என 8 விமான சேவைகள், இன்று(நவ,,11) மற்றும் நாளை(நவ.,12) தேதிகளில் தொடர் மழையின் காரணமாக மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா வருகை மற்றும் புறப்பாடு என இருவழத்தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளிட்டுள்ளது.

Source link