November 28, 2021

News window

News around the world

குருப்பெயர்ச்சி 2021: குருபகவானுக்கு சிறப்புயாகம் – குருவித்துறை ஆலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை | Guru peyarchi 2021: Kuruvithurai Gurubhagavan temple Special yagam devotees are not allowed

ஜோதிடம்

ஓய்-ஜெயலட்சுமி சி

வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 2021, 19:17 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

மதுரை: குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால் குருவித்துறை குருபகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெறும். பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். குரு பெயர்ச்சி விழாவில் பங்கேற்க இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் அனுமதியில்லை என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கியப் பஞ்சாங்கப்படி குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும் என ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குருபெயர்ச்சி 2021: குருவித்துறை குருபகவான் கோவிலில் சிறப்பு யாகம் நடத்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

குருபகவான் ஆலயங்களில் லட்சார்ச்சனையும் பரிகார யாகங்களும் நடைபெற உள்ளன. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு குருபெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் 11ஆம் தேதி தொடங்கியது. விழாவை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன்ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர். ஸ்ரீதர் பட்டர், ரங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உள்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர்.

11ஆம் தேதி தொடங்கிய லட்சார்ச்சனை 13ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். அன்று மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை தொடங்கி 6.10 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், தக்கார் வெண்மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குரு பகவான் மாலை 6.10 மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால் குருபகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெறும். பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். குருப்பெயர்ச்சி விழாவில் 13 மற்றும் 14ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் துண்டு, முல்லைப்பூ மாலை, மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனையும் பரிகார பூஜைகளும் செய்கின்றனர்.

சுசீந்திரம் தாளகுளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் குரு பெயர்ச்சி யாகங்களும் பரிகாரங்களும் நடைபெற உள்ளன.

ஆங்கில சுருக்கம்

குரு பெயர்ச்சி 2021: குருவித்துறை குருபகவான் கோவிலில் சிறப்பு யாகம் நடத்துபவர்களுக்கு அனுமதி இல்லை குரு பகவான் குரு பெயர்ச்சி மகரத்தில் இருந்து கும்பம். பரிகார யாகத்தில் வழிபட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். குரு பெயர்ச்சி விழாவில் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கதை முதலில் வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 2021, 19:17 [IST]

Source by [author_name]