December 8, 2021

News window

News around the world

குருப்பெயர்ச்சி பலன்கள் ; பூசம் நட்சத்திர அன்பர்களே! தொழிலில் வெற்றி; வேலையில் உயர்வு; கஷ்டம் தீரும்; மதிப்பு உயரும்!  | guru peyarchi 2021 poosam palangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூசம்:

கிரகநிலை:
குரு பகவான் உங்களின் பதினாறாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

தாய் தந்தையரைப் போற்றும் பூச நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குருப்பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.

தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உங்களின் தொழிலில் வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இதுவரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

பெண்களுக்கு பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம்.
மாணவர்களுக்கு பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும்.
அரசியல்துறையினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும். உங்களைப்பற்றி குறைகூறியவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.

கலைத்துறையினருக்கு கதை இலக்கியம் பொறுத்தவரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள்.

பரிகாரம்:
குபேரன் வழிபாட்டினால் பொறுப்புகள் அதிகரிக்கும்

மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Source by [author_name]