December 9, 2021

News window

News around the world

காலபைரவாஷ்டமி – நோய்கள் நீங்க எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் பைரவரை வணங்கலாம் | Kalabhairavasthami – Any zodiac sign can worship Bhairav on any given day

ஜோதிடம்

ஓய்-ஜெயலட்சுமி சி

வெளியிடப்பட்டது: செவ்வாய், நவம்பர் 23, 2021, 16:34 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: சனி தோஷம் நீங்க கால பைரவரை வணங்க வேண்டும். அஷ்ட சனி, கண்டச்சனி, ஏழரை சனி என சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க கால பைரவரை வணங்குவது நன்மையை ஏற்படும். நவ கிரகங்களும் 12 ராசிகளும் பைரவருக்குள் அடக்கம் என்பதால் 12 ராசிகளில் பிறந்தவர்கள் காலபைரவரை எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

நவம்பர் 27ஆம் தேதி காலபைரவாஷ்டமி கடைபிடிக்கப்படுகிறது. அஷ்டமி திதியில் மட்டும்தான் காலபைரவரை வணங்க வேண்டும் என்பதில்லை பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிறன்று பைரவரை வழிபடுவது சிறப்பு. தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமை

கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை

மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பு. மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம்.

  புதன்கிழமை

புதன்கிழமை

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிடைக்கும்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை

தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

சனிக்கிழமை

சனிக்கிழமை

மகரம், கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையன்று வழிபடுவது சிறப்பு தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சனிப்பிரதோஷம்

சனிப்பிரதோஷம்

சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும்.

ஆங்கில சுருக்கம்

சனி தோஷம் நீங்க கால பைரவரை வழிபட வேண்டும். பைரவருக்குள் 12 ராசிகள் அடக்கம், 12 ராசிகளில் பிறந்தவர்கள் காலபைரவரை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

கதை முதலில் வெளியிடப்பட்டது: செவ்வாய், நவம்பர் 23, 2021, 16:34 [IST]

Source by [author_name]