December 8, 2021

News window

News around the world

கார்த்திகை பவுர்ணமி – சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி | Karthikai Pavurnami – Devotees are allowed to visit the Sathuragiri hill temple

செய்தி

ஓய்-ஜெயலட்சுமி சி

வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, நவம்பர் 15, 2021, 12:59 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

விருதுநகர்: பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மழை பெய்தால் தடை விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கார்த்திகை பவுர்ணமி - சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.

காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.

சித்தர்கள் உலவும் சதுரகிரி மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவேதான் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள்,பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். கொரோனா பரவலை முன்னிட்டு சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. மழை காரணமாகவும் அவ்வப்போது தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - இன்று பள்ளிகளுக்கு எங்கெங்கு விடுமுறை கன்னியாகுமரியில் 3 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – இன்று பள்ளிகளுக்கு எங்கெங்கு விடுமுறை

இந்நிலையில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 16ஆம் தேதி முதல் 19 தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில சுருக்கம்

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் தடை விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கதை முதலில் வெளியிடப்பட்டது: திங்கள், நவம்பர் 15, 2021, 12:59 [IST]

Source by [author_name]