January 29, 2022

News window

News around the world

கஷ்டப்பட்டு வேலை செய்யும் போதெல்லாம் மெதுவா சுத்திட்டு.. இப்போ மட்டும் இவ்ளோ வேகமா சுத்துறியே! | Viral memes collection on sunday 26-12-2021

சென்னை: வார இறுதி நாட்களை எப்படியெல்லாம் கழிக்கலாம் என ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வார நாட்கள் முழுவதும் சம்பளத்திற்காக வேலை பார்ப்பவர்கள், வார இறுதியில் விடுமுறை நாட்களில் ஆயிரத்தெட்டு திட்டங்கள் வைத்திருப்பார்கள். சினிமா போக வேண்டும், அசைவம் சாப்பிட வேண்டும், முடி வெட்ட வேண்டும் என இப்படியாக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிளான் இருக்கும். ஆனால் பொதுவாக எல்லோருக்குமே விடுமுறை நாட்களில் நன்றாக தூங்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.

மற்ற நாட்களில் வேலைக்குச் செல்ல வேண்டும் என பரபரப்பாக ஓடியவர்கள், ஓய்வு நாளிலாவது கொஞ்சம் நிம்மதியாக கடிகாரம் பார்க்காமல் தூங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் கண்ணை மூடித் திறப்பதற்குள் விடுமுறை முடிந்து விடும்.

இப்படி வார இறுதிநாட்கள் பற்றி ஆயிரத்தெட்டு திட்டம் வைத்திருப்பவர்கள் பற்றி சில ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக…

Source link