October 18, 2021

News window

News around the world

கர்நாடகா: ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு – தவறி மகன் மீதே பாய்ந்த குண்டு

கர்நாடகா மங்களூரை சேர்ந்த டிராவல்ஸ் முதலாளி பிரபு, நிலுவை ஊதியத்தை கேட்ட ஓட்டுநர் மற்றும் உதவியாளரை நோக்கி சுட்டபோது, தற்செயலாக துப்பாக்கி தோட்டா அவரின் மகன் மீதே பாய்ந்தது.

மங்களூரில் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருபவர் பிரபு. இவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஓட்டுநர் மற்றும் கிளீனருக்கு 4,000 ரூபாய் பணம் தரவேண்டியிருந்தது. இந்த சூழலில் டிரைவரும், கிளீனரும் நேற்று தங்கள் நிலுவைத் தொகையைக் கேட்டு பிரபுவின் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பிரபுவின் மகன் மற்றும் அந்த ஊழியர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பிரபு அந்த ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அப்போது ஊழியர்கள் துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து தப்பினர், ஆனால் பிரபுவின் மகன் மீது குண்டு பாய்ந்தது.

image

துப்பாக்கி சூட்டில் தலையில் கடுமையான காயம் அடைந்த பிரபுவின் மகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பாக மங்களூர் தெற்கு காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, பிரபு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைப்படிக்க…“நான் மாட்ட மேய்க்கிறேன், நீங்க தடுப்பூசி போட்டு வாங்க”- விவசாயியை வியக்க வைத்த மருத்துவர் 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link