December 9, 2021

News window

News around the world

கடன், நோய், எதிரி தொல்லை நீக்கும் அங்காரக சதுர்த்தி விரதம் – கோடீஸ்வர யோகம் தேடி வரும் | Angaraka Chaturthi fasting importance and benefits

செய்தி

ஓய்-ஜெயலட்சுமி சி

வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, நவம்பர் 22, 2021, 17:30 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: அங்காரக சதுர்த்தி விரதம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். வளர்பிறை சதுர்த்தியை “வர சதுர்த்தி” என்றும், தேய்பிற சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறுவார்கள். அங்காரக விரதம் இருந்து விநாயகரை வணங்கினால் கடன், நோய், எதிரி தொல்லை நீங்கும். கோடீஸ்வர வாழ்வு தேடி வரும். வீடு மனை யோகம் தரும் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.

பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார்.

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் விரத்தை தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

அங்காரக சதுர்த்தி விரதத்தின் முக்கியத்துவமும் பலன்களும்

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று அழைக்கின்றனர்.

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும். இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

இன்றைக்கு கடன் வாங்காதவர்கள் யாரும் இல்லை. கடன் வாங்கக் கூடாது என்று நினைத்தாலும் போனில் தொந்தரவு செய்தாவது கடனை நம் தலையில் கட்டி விடுகிறார்கள். ஒருவருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் போது, அர்த்தாஷ்டம சனி நடக்கும் போதும் கடன் வாங்கக் கூடாது. அதே போல கோச்சார ரீதியாக குரு ஆறாம் வீட்டில் நிற்கும் போதும் குரு பகவான் சர்ப்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போதும் கடன் வாங்கவே வாங்கக் கூடாது.

அதேபோல பலரும் ஏதாவது ஒரு நோயினால் சிரமப்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் கடன் பிரச்சினைகள் நீங்கும். தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை. சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு! ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு!

அங்காரக சதுர்த்தி விரதம் கடைபிடிப்பவர்கள் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.

ஆங்கில சுருக்கம்

அங்காராகி சதுர்த்தி என்பது செவ்வாய் கிழமையில் வரும் சங்கஷ்டி சதுர்த்தி ஆகும். சங்கஷ்டி சதுர்த்தி நாட்களில் இது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சங்கட ஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படும் சங்கஷ்டி சதுர்த்தி விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மங்களகரமான நாள்.

கதை முதலில் வெளியிடப்பட்டது: திங்கள், நவம்பர் 22, 2021, 17:30 [IST]

Source by [author_name]