December 8, 2021

News window

News around the world

எதே.. துணி வாங்குனா ஆடு இலவசமா.. வட்டிக்கு காசு வாங்கியாவது பத்து டிரஸ் எடுத்திருவோம் | Viral memes collection on Diwali offers

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிக்கு துணி வாங்கினால் ஆடு இலவசம் என்ற விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கூடவே இந்த விளம்பரத்தை வைத்து மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பத்தாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசாமல் ஆடை வாங்குபவர்கள்கூட, பில் போடும் போது கட்டைப்பை தரவில்லையென்றால் பொங்கி எழுந்து விடுவார்கள். அந்தளவிற்கு இலவசங்களுக்கு மக்கள் அடிமை. இதை தாரக மந்திரமாக வைத்து தான் வியாபாரிகளும் டிசைன் டிசைனாக ஆஃபர்களை அள்ளி வீசி, தங்களது வியாபாரத்தை பெருக்குகின்றனர்.

Viral memes collection on Diwali offers

மற்ற சமயங்களிலேயே இலவசம் தருபவர்கள் தீபாவளி என்றால் சும்மா இருப்பார்களா.. ஒரு ஆடை வாங்கினால் இரண்டு இலவசம், துணி வாங்கினால் பட்டாசு இலவசம் என விதவிதமாக ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Viral memes collection on Diwali offers

இந்த வரிசையில் திருவாரூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளிக்கு துணி எடுத்தால் ஆடு இலவசம் என அதிரடியாக அறிவித்துள்ளனர். எப்படியும் தீபாவளியன்று புத்தாடை அணிந்து கறிச்சோறு சாப்பிடுவதைத்தான் அசைவப் பிரியர்கள் விரும்புவார்கள். அதை மனதில் வைத்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் போலும்.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த ‘சலுகை..’ 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

Viral memes collection on Diwali offers

அவர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி விட்டது. கூடவே இந்த விளம்பரத்தை மையமாக வைத்து பல ஜாலி மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக..

English summary

These are some jolly memes collection on Diwali special goat free for clothes offer.

Source link