December 8, 2021

News window

News around the world

உத்தரகண்ட் வெள்ளம் அமைச்சர் அமித் ஷா ஆய்வு

டேராடூன்:உத்தரகண்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் மூன்று நாட்கள் விடாமல் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நைனிடால் உட்பட பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் உடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகண்ட் மாநிலத்துக்கு நேற்று வந்தார். டேராடூனிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அமித் ஷாவுடன், கவர்னர் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ராணுவ இணையமைச்சர் அஜய் பட் ஆகியோர் சென்றனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று அமித் ஷா ஆய்வு செய்தார்.

இதன்பின், வெள்ள பாதிப்பு குறித்து, முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன், அமைச்சர் அமித் ஷா தீவிர ஆலோசனை நடத்தினார்.இது குறித்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் 7,000 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலங்கள், சாலைகளை சீரமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.மழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை54 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link