December 9, 2021

News window

News around the world

உதவிப் பேராசிரியர்கள் தேவை – சென்னை ஐ.ஐ.டி. அறிவிப்பு

சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் www.iitm.ac.in இணையதளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களை https://facapp.iitm.ac.in/2021m இணையதளத்தில் அறியலாம்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link