November 28, 2021

News window

News around the world

உங்க வீட்டில் வாஸ்து சரியில்லையா?- வாஸ்து தோஸ்து ஆக இந்த பரிகாரங்களைப் பண்ணுங்க | Today vasthu day: Is Vastu not good in your house?remedies

செய்தி

ஓய்-ஜெயலட்சுமி சி

புதுப்பிக்கப்பட்டது: புதன், நவம்பர் 24, 2021, 9:23 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: சிலரது வீட்டில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதும், தீ விபத்து ஏற்படுவதுமாக இருக்கும். சிலரது வீடடில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. சிலரது வீட்டில் துர்மரணங்கள் ஏற்படும். இன்னும் சிலரது வீடடில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஜாதக தோஷம் மட்டுமின்றி வாஸ்து பிரச்சனையாக கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நமக்கு பெரிதும் உதவி புரிவது வாஸ்து பகவானும், பரிகார பூஜைகளும்தான். வாஸ்துநாளான இன்றைய தினம் வாஸ்து கோளாறுகளினால் ஏற்படும் நோய்களைப் பற்றியும் பரிகாரங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

எங்கே போனார்? கரூர் மாணவி தற்கொலை.. குமுறிய மாணவர்கள்.. சட்டென விசிட் அடித்த செந்தில் பாலாஜி! எங்கே போனார்? கரூர் மாணவி தற்கொலை.. குமுறிய மாணவர்கள்.. சட்டென விசிட் அடித்த செந்தில் பாலாஜி!

வாஸ்து என்றால், பொருள்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடம் என்று பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழலாம். மனிதன் ஏற்படுத்திக்கொண்ட வசதி வாய்ப்புகளை இயற்கைச் சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல்தான் வாஸ்து சாஸ்திரம்.
பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் நம் நாட்டின் அனைத்து கலைகளுமே தோன்றியுள்ளன. நம் நாட்டின் கலைகளில் சித்த மருத்துவமும், இயற்கை மருத்துவமும் பஞ்ச பூத சக்திகளில் ஒன்று கூடுவதாலோ அல்லது குறைவதாலோ தான் மனிதனுக்கு நோய் வருகிறது என்றும், அவற்றை சரி செய்தாலோ அல்லது சமன் செய்தாலோ நோய் தீரும் என்பதையும் விளக்குகிறார்கள்.

வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். கார்த்திகை 8ஆம் தேதி இன்று வாஸ்து தினமாகும். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வாஸ்து நாட்கள் வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதிற்கு உகந்த நேரம் ஆகும். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.

திசைகள் காட்டும் குறிப்புகள்

திசைகள் காட்டும் குறிப்புகள்

வடக்கு திசை செல்வத்தின் தன்மை, மகிழ்ச்சி, அறிவு, ஆற்றல், பெண்களின் வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும். வடகிழக்கு உடல்நலம், அறிவு, முன்னேற்றம், புகழ், செல்வம், வம்ச விருத்தி ஆகியவற்றைக் குறிக்கும். கிழக்கு ஆண்களின் உயர்வுக்கும், புகழுக்கும் உரிய திசை. அறிவு, ஆற்றல், தந்தை, கௌரவம், பதவி ஆகியவற்றைக் குறிக்கும் திசையாகும். தென்கிழக்கு சுபகாரியம், பெண்களின் உடல் நலம், ஆண்களின் நன்நடத்தை, காமம், கலைகளில் தேர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும். தெற்கு பெண்களின் தன்மை, நீதி, நேர்மை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிக்கும். தென்மேற்கு புத்திரபாக்கியம், குடும்பத் தலைவன், மூத்த மகன், மூத்த மகள் ஆகியவர்களின் குணங்கள், உடல்நலம், நல்லெண்ணம், தொழில் ஆகியவற்றைக் குறிக்கும். மேற்கு ஆண்களின் புகழ், கௌரவம், உடல் நலம் ஆகியவற்றைக் குறிக்கும். வடமேற்கு குடும்ப உறவுகள், மனநிம்மதி, நட்பு, வியாபாரம், வழக்குகள், அந்தஸ்து ஆகியவற்றைக் குறிக்கும்.

திசைகளும் காற்றும்

திசைகளும் காற்றும்

ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் இருந்து காற்று வரும்பொழுது அதில் ஆக்ஸிஜன் நிறைந்து இருக்கிறது. வடகிழக்கு மூலையில் இருந்து வரும் காற்றில் நீர் நிறைந்து இருக்கிறது. தென்கிழக்கு மூலையில் இருந்து வரும் காற்றில் வருடத்தின் மிகுந்த நாட்களில் வெப்பம் மிகுந்து காணப்படுகிறது. தென்மேற்கு மூலையில் இருந்து வரும் காற்றின் வறட்சி அதிகமாக இருக்கிறது. தெற்கில் அதிக காலி இடம், பள்ளங்கள் அந்த வீட்டில் உள்ள பெண்களை பாதிக்கும். மேற்கில் அதிக காலி இடம் இருந்தால் அந்த வீட்டின் ஆண்களை பாதிக்கும்.

கிழக்கு சூரியன்

கிழக்கு சூரியன்

ஒவ்வொரு வீடும் கிழக்கிலிருந்து சூரிய ஒளி பெறும் வகையில் அமைக்க வேண்டும். சூரிய ஒளி இல்லாவிட்டால் வைட்டமின் பற்றாக்குறையினால் கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு ஆகியவைகளின் வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும். ஒவ்வொரு வீடும் கிழக்கிலிருந்து சூரிய ஒளி பெறும் வகையில் அமைதல் வேண்டும். சூரிய ஒளி இல்லையேல் வைட்டமின் பற்றாக்குறையினால் கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும்.

நோய்களை தடுக்கும் வைட்டமின் டி

நோய்களை தடுக்கும் வைட்டமின் டி

வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடலில் உள்ள அணைத்துத் திசுக்களுமே பொதுவாகப் பாதிக்கப்படக்கூடும். இந்த பாதிப்பின் அடையாளங்களும் அறிகுறிகளும் ஒவ்வொருவருக்கும் பலவகையான நோய்களை குறிப்பாக மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை, இரத்த கொதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சூரிய ஒளியின் மூலம் நாம் பெறும் ‘வைட்டமின் டி’ நம்மை பல வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. கிழக்கு திசையில் சூரிய ஒளியில் உருவாகும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இவை இரத்த சிவப்பணுக்களின் ஆயுளை அதிகரிக்கவும் உதவுகின்றன.

ஆண்களுக்கு அவசியம்

ஆண்களுக்கு அவசியம்

கிழக்கு திசையின் சூரிய ஒளியால் உருவாகும் வைட்டமின் டி சத்துக்களினால் ஆணின் விந்து சந்தி அதிகரிக்கும். மேலும், குழந்தைகளுக்கு அதிகாலை சூரிய ஒளி உடல் வளர்ச்சியையும் எலும்புகள் வளர்ச்சி அடையவும், கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படாமலும் தடுக்கிறது.எனவேதான் குழந்தைகளை காலை நேரத்தில் வெயிலில் காண்பிக்கும் பழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பாதிப்பு

தென்மேற்கு பாதிப்பு

கிழக்கு பகுதி முழுவதும் அடைப்பட்ட வீட்டில் கண்பார்வை கோளாறு. தைராய்டு பிரச்சனை, வைட்டமின் பற்றாக்குறை,மனநலம் தொடர்பான பிரச்சனைகள்,இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும். வடக்கு பகுதி முழுவதும் அடைப்படும் போது கோமா நிலை, மனநல பாதிப்பு,மூளை தொடர்பான அனைத்து விதமான நோய்களும் ஏற்படும். தெற்கு பகுதியில் தவறு வரும் போது பெண்களின் உடல் நலம் மட்டும் கெடும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இரத்த நாளங்கள் தொடர்பான அனைத்து விதமான நோய்களும் ஏற்படும். கேன்சர், குடல் சம்பந்தமான அனைத்து விதமான நோய்களும் ஏற்படுகிறது. தென்மேற்கு பகுதியில் தவறாக அமைந்தால் கிட்னி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஆண்களுக்கு இதயம் பாதிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளும், பித்தப்பை, கல்லீரல், கணையம், முதுகு தண்டுவடம், பாலின உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும்.

கண் பிரச்சினைகள்

கண் பிரச்சினைகள்

மேற்கு மற்றும் வடமேற்கு தவறாக இருக்கும் பட்சத்தில் எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை ஏற்படும். முழங்கால் வலி, மூட்டு அறுவை சிகிச்சை செய்வது, கால்களில் அடிக்கடி முறிவு ஏற்படுவது. கைகளில் அடிக்கடி முறிவு ஏற்படுவது. கால் பாதங்களில் அடிக்கடி பிரச்சனை வருவது. மனநலம் கெடுவது, கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கர்ப்பப்பை அகற்ற வேண்டியிருக்கும். குழந்தை பாக்கியம் பாதிக்கும். வீடு அமைப்பில் தவறு இருக்கும் பட்சத்தில், அந்த தவறான அமைப்புக்கு உண்டான நோய் ஏற்படும். வாஸ்து கோளாறுகளை சரி செய்தால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், பூர்ண வாஸ்துப்படி நாம் வாழும் இடங்களை மாற்றி அமைத்து கொள்ளவும். வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், வாஸ்து சாந்தி பரிகார ஹோமமும் செய்வதன் மூலம் சரியான தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள உறவுகளை மேம்படுத்த முடியும். ஒன்பது கிரகங்களை திருப்தி படுத்தும் விதத்தில் யக்ஞஸ்ரீ. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் தோஷங்கள் குறையும். வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் இடையூறில்லாத வெற்றிகளை பெற முடியும் என்கிறது ஜோதிட சாஸ்த்திரங்கள்.

27 நட்சத்திர விருட்சங்கள்

27 நட்சத்திர விருட்சங்கள்

நவ கலசங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள், மற்றும் நவ மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தின் மூலம் துன்பங்கள் குறையும். தடைகள் விலகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி. அதிர்ஷ்டங்கள் மற்றும் நன்மைகள் பெறலாம். நவக்கோள்களின் அனுக்கிரகம் கிடைக்கும். வெற்றிகரமான வாழ்க்கை அமையும். மன அழுத்தம் குறையும். செயல்திறன் கூடும். வாழ்க்கையில் வளர்ச்சி. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி. கல்வியில் வெற்றி. நீண்ட ஆயுள். செல்வ செழிப்பு. தொழிலில் முன்னேற்றம். இயற்கை வளம் போன்ற பல்வேறு பலன்களை பெறலாம். மேற்கண்ட யாகத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலசக்கரமாக அமைத்துள்ள 27 நக்ஷத்திர, 9 நவக்கிரக விருட்ஷங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்புக்கு 04172 – 230033, செல் – 9443330203

ஆங்கில சுருக்கம்

இன்று வாஸ்து தினமான சிலர் வீட்டில் அடிக்கடி திருட்டு மற்றும் தீ விபத்துகள் ஏற்படும். வீட்டில் எவ்வளவு முயற்சி செய்தாலும் செல்வம் வராது. சிலரது வீட்டில் மரணங்கள் நிகழ்கின்றன. இன்னும் சிலர் தேவையில்லாமல் வீட்டிற்கு வருவதில் சிக்கல். இதற்கு முக்கிய காரணம் ஜாதக தோஷம் மட்டுமல்ல வாஸ்து பிரச்சனையும் கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வாஸ்து பகவான் மற்றும் பரிகார பூஜைகள் பெரிதும் உதவுகின்றன. வாஸ்து தினமான இன்று வாஸ்து கோளாறுகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

Source by [author_name]