January 29, 2022

News window

News around the world

இவ்ளோ அடி வாங்கியும்.. நியூ இயர்க்கு பிளான் பண்றியே.. எவ்ளோ திமிர் இருக்கணும் உனக்கு? | Viral memes collection on newyear 2022

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: புது வருடம் பிறக்கப் போகிறதே என்ற சந்தோசத்தைவிட, 2022ம் ஆண்டும் என்னென்ன பிரச்சினைகளைக் கொண்டு வரப் போகிறதோ என மீம்ஸ் போட்டு கவலைப்பட்டு வருகின்றனர் மீமர்கள்.

Viral memes collection on newyear 2022

2020ம் ஆண்டு வரை புத்தாண்டு பிறக்கப் போகிறதென்றாலே மக்கள் மத்தியில் புதிய உற்சாகம் தானாகவே வந்து தொற்றிக் கொள்ளும். சந்தோசமாக புதிய ஆண்டை வரவேற்கத் தயாராகி விடுவார்கள். தங்களது கஷ்டங்கள் எல்லாம் இந்த ஆண்டோடு முடிந்து விடும், பிறக்கப் போகிற ஆண்டு நிச்சயம் சந்தோசமானதாக அமையும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்பார்கள்.

Viral memes collection on newyear 2022

அப்படித்தான் 2020ம் ஆண்டையும் மக்கள் வரவேற்றார்கள். ஆனால் அந்த வருடம் கொரோனா பிரச்சினை, ஊரடங்கு என படாதபாடு படுத்தி எடுத்து விட்டது. சரி, 2021வது நல்லபடியாக அமையும் என நினைத்தால், இந்தாண்டு கொரோனா இரண்டாம் அலை வந்து, முதல் அலையைவிட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

Viral memes collection on newyear 2022

பிறக்கப் போகும் 2022வது ஆண்டாவது கொரோனா ஒழிந்து மக்கள் மீண்டும் பழைய இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையும், நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அதற்கும் வேட்டு வைப்பது மாதிரி, ஒமைக்ரான் இப்போதே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. இப்படி ஆண்டிற்கு ஆண்டு கொரோனா புதிய உருவம் கொண்டு மக்களைப் பாடாய்படுத்தி வருகிறதே என்ற கவலை பரவலாக உள்ளது.

Viral memes collection on newyear 2022

தங்களது இந்த கவலையை மீம்ஸ்களாகப் போட்டு, பிறக்கப் போகும் புத்தாண்டை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…

Viral memes collection on newyear 2022
Viral memes collection on newyear 2022
Viral memes collection on newyear 2022
Viral memes collection on newyear 2022
Viral memes collection on newyear 2022

English summary

These are some jolly memes collection on new year 2022.

Source link