October 20, 2021

News window

News around the world

இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு| Dinamalar

ஆஸ்லோ-இந்த ஆண்டு அமைதிக்கான ‘நோபல்’ பரிசு ரஷ்யா மற்றும் பிலிப்பைன்சைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தோருக்கு ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஆஸ்லோவிலும், மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ௫ம் தேதி முதல் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

latest tamil news

இந்நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவை சேர்ந்த பத்திகையாளர் டிமிட்ரி முரடோவ், பிலிப்பைன்சைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரிய ரெசா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அமைதிக்காகவும், ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும் பாடுபட்டதற்காக இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுவழங்கப்படுவதாக தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Advertisement

Source link