January 29, 2022

News window

News around the world

ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் – 28 | Margazhi masam : Tirupavai, Tiruvempavai songs – 28

ஜோதிடம்

ஓய்-ஜெயலட்சுமி சி

புதுப்பிக்கப்பட்டது: புதன், ஜனவரி 12, 2022, 6:00 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

திருப்பாவை பாடல் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

மார்கழி மாசம்: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 28

பாடல் விளக்கம்

இடையர் குலத்தில் பிறந்த நாங்கள், பசுக்கூட்டங்களின் பசு, ஆடு, மாடு ஆகியவற்றை மேய்த்தபடியே காடு சென்றோம். வலக்கை இடக்கை அறியாத ஆயர்குலத்தில், பிறந்தவர்கள் நாங்கள். கண்ணா, நீயும் பசுக்கூட்டங்களோடு உன் இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு, கானகம் வந்துள்ளாய் அங்கு ஆயர்குலத்தவருடன் சேர்ந்து உணவு உண்கிறாய். இதுவே நாங்கள் பெற்ற பெரும்பேறு! நீ ஆயர்குலத்தில் பிறந்ததே நாங்கள் இப்பிறப்பில் செய்த பெரும் புண்ணியம். குறைவொன்றும் இல்லாத கோவிந்தனே! உமக்கும் எமக்கும் உள்ள இந்த உறவு பந்தம், யாராலும் எப்போதும் பிரிக்க இயலாதது. இந்தப் பிறப்பில் மட்டுமல்ல… முற்பிறப்பிலிருந்தே ஏற்பட்ட பந்தம். நாங்களோ சிறுபிள்ளைகள். படிப்பறிவில்லாத ஆயர்குலத்தில் தோன்றியவர்கள். உம்மை மரியாதையாக, உயர்வாக, உமது லட்சணத்துக்கு ஏற்றவாறு உனது ஆறு குணங்களையும் விளக்கக்கூடிய சொற்களால் உன்னை துதிக்க எமக்குத் தெரியாது. எனவே, உனது பெயரை முழுமையாகக் கூட்ட சொல்லத் தெரியாமல் சிறிய பெயரால், கண்ணா என்று அழைக்கிறோம். அதைக் கண்டு கோபம் கொள்ளாமல், எங்களது இறைவனே! நீயே எமக்கு அருள்புரிய வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8:

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

விளக்கம்:

என்னை ஆட்கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக! என்று இறைவனை போற்றிப் பாடுகிறார்
மாணிக்கவாசகர்.

ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - 27ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் – 27

ஆங்கில சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள விஷ்ணு மற்றும் சிவன் கோயில்களில் மார்கழி மாதம் ஜனவரி 12,2022 அன்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை தொடங்கியது. இங்கே திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல் உள்ளது

Source by [author_name]