December 9, 2021

News window

News around the world

ஆக்கிரமிப்பு எல்லையில் கிராமம்: இந்தியா ஒருபோதும் ஏற்காது| Dinamalar

புதுடில்லி :’அருணாச்சலில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த எல்லைப்பகுதியில் கிராமத்தை கட்டும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒரு போதும் ஏற்கவில்லை; நியாயப்படுத்தவும் இல்லை’ என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் எல்லையை ஒட்டிய பகுதியில் அதி நவீன கிராமம் ஒன்றை சீனா கட்டி வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

latest tamil news

இந்நிலையில் இதுபற்றி வெளியுறவு அமைச்சக செயதி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:
சீனா கடந்த 1962ல் அருணாச்சல் எல்லைப்பகுதியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தது. அங்கே பல ஆண்டுகளாவே சீனா கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த சட்ட
விரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கவும் இல்லை; நியாயப்படுத்தவும் இல்லை.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link