January 29, 2022

News window

News around the world

அறிவுக்கு அதிபதி அகத்தியரை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் – தன்வந்திரி பீடத்தில் ரோக நிவாரண ஹோமம் | Agasthiyar Jayanthi : Disease relief homam at Dhanvantari Peedam

செய்தி

ஓய்-ஜெயலட்சுமி சி

வெளியிடப்பட்டது: வியாழன், டிசம்பர் 23, 2021, 14:30 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

ராணிப்பேட்டை: அகத்தியர் சித்தர்களுக்கெல்லாம் முதன்மையானவர், தலைவர் என்றும் கூறலாம். அவர் ஞானத்திற்கும், அறிவிற்கும் அதிபதி. இவரை வணங்குவதால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் கல்வி, ஞானம் கூடும். ராணிப்பேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அகத்தியர் ஜெயந்தி விழாவும் ரோக நிவாரண ஹோமம் நடைபெற்றது.

எம் ஐயன் அகத்தியப் பெருமான் எனையாளும் ஈசனே. அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம். இவ்வுலகம் உய்யும் பொருட்டு அகத்திய பெருமான் ஆற்றிவரும் பணி அளப்பரியது. நாடி வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து வீடுபேறும் அளித்திட பல ஊர்களில் கோயில் கொண்டுள்ளார்.

அவ்வகையில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ் புதுப்பேட்டை எனும் ஊரில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நாக கொடையுடன், சிவ பஞ்சாட்சர மந்திரத்துடன் அருள் பாவிக்கின்றார். மேலும் ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையின் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜெபமாலையுடன், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார்.

ஸ்ரீ அகஸ்தியர் ஜெயந்தி விழா வருகிற 23.12.2021 மார்கழி மாதம் 8 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10:00 மணி முதல் தன்வந்திரி பீடத்தில் பல்வேறு மூலிகை கொண்டு ரோக நிவாரண ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து விஷேச திரவியங்களுடன் மஹா அபிஷேகமும் அராதனையும் பக்தர்கள் முன்னிலையில் உலக நலன் கருதி நடைபெற்றது.

அகஸ்தியர் ஜெயந்தி: தன்வந்திரி பீடத்தில் நோய் நிவாரண ஹோமம்

அகத்தியரின் சிறப்புகள்

மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக கருதப்படும் அகத்தியரின் பிறந்த தினம் சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. அகத்தியம் என்பது ஒரு மரபு. அந்த மரபின் முதல் சித்தர் அகத்தியர். உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அகத்தியர் தொடாத விஷயங்களே இல்லை.

இந்திரனின் சாபத்தால் தீ என்ற பூதமானது, கும்பத்தில் கிடந்து, பூமியில் விழுந்து, வாயுவின் துணையால் அகத்தியராக உருவெடுத்தது என்பது புராணக்கதை. எனவே அகத்தியரை கும்பமுனி என்றும் குறிப்பிடுவர்.
12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்தியர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. வேதத்தில் வல்லவரான அகத்தியர் தமிழ் கற்றுத்தேர்ந்து தமிழ் மருத்துவத்தை முதல் நிலைப்படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தி சித்த மருத்துவத்தை தோற்றுவித்தார் என்பதால் சித்த மருத்துவத்தின் முதல் சித்தர் அகத்தியராக வணங்கப்படுகிறார்.

கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் அகத்தியரை பற்றிய குறிப்புகள் வியூப்பூட்டுகின்றன. அகம் என்றால் ஒளி, தமிழ் மொழிக்கு ஒளியாகிய வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்தாள் அகத்தில் தீயை கொண்டு அதன் மூலம் இந்த பிரபஞ்சத்திற்கு நல்வாழ்வு நெறிகளை போதித்ததால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கஷ்டம் என்றால் பாவம். அகஸ்தம் என்றால் பாவத்தை நீக்குதல். கர்ம வினையினால் நாம் செய்த பாவங்களை நீக்குவதால் அகஸ்தியர் என்றும், எந்தவிதமான நஞ்சானாலும், அதை நீக்கி வெளியேற்றும் தன்மையுடைய அகத்தி மரத்துக்கு ஒப்பானதால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகிறார். சப்த ரிஷிகளில் ஒருவராகவும், அஷ்ட ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் வணங்கப்படுகிறார்.

அகஸ்தியரை வழிபட்டால் என்னென்ன நன்மைகள்

அகத்தை அடக்கியவர், அகத்தீயை அடக்கியவர், அகத்தில் அழுக்கில்லாதவர், கும்பத்திலிருந்து வந்தவர், வாதாபியை தோற்கடித்தவர், என அகத்தியரை பற்றி வேதங்களும், புராணங்களும், இலக்கியங்களும், தமிழ் நுால்களும் குறிப்பிடுகின்றன. ரிக் வேத காலத்திலேயே அகத்தியரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளிலும் கூட அகஸ்த்தியரை பற்றிய பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.

அகத்தியர் தமிழ் இலக்கணம் வகுத்தவர்.சமுத்திர நீரைக் குடித்து தேவர்களை காத்த பெருமை அகத்தியருக்கு உண்டு. கைலாய மலை, மேருமலை, சிவன் வழிபாட்டு தலமாக உள்ள வடக்கே சிவனை காண அலைகடலென மக்கள் கூடியதால் தென்பகுதியை காக்க அகத்தியர் வந்தரென்றும் வரலாறு குறிப்பிடுகிறது.

சிவனின் கட்டளைப்படி பொதிகை மலைக்கு வந்ததாக திருமூலர் திருமந்திரத்தில் அகத்தியரை பற்றிய பாடலை குறிப்பிடுகிறார். ராமாயணத்தில் குள்ளமாக, தடிமனான, உருவமுடைய அகத்தியர் தெற்கே வசித்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.

அறிவின் அதிபதி அகஸ்தியர்

அகத்தியர் சித்தர்களுக்கெல்லாம் முதன்மையானவர், தலைவர் என்றும் கூறலாம். அவர் ஞானத்திற்கும், அறிவிற்கும் அதிபதி. இவரை வணங்குவதால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் கல்வி, ஞானம் கூடும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிபெண்கள் பெறலாம், நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறலாம், ஆராய்ச்சி பணிகளில் வெற்றி பெறலாம் அனைத்திற்கும் அகத்தியரின் ஆசி துணை புரியும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் நிம்மதி, பணிகளில் முன்னேற்றம், எதிரிகளை வெற்றி கொள்ளுவதில் வல்லவர். குடும்பத்தில் நிம்மதி, பணிகளில் முன்னேற்றம், எதிரிகளை வெற்றி கொள்ளுதல், கல்வி அறிவு கூடுதல் ஆகியன இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

குடும்ப வாழ்விலும், புற வாழ்விலும் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தந்து ஆசீர்வதிப்பவர். மன மகிழ்ச்சியின் போதும், தாங்க முடியாத துன்பத்தின் போதும் பக்கபலமாக இருந்து நன்மை செய்பவர். வாழ்க்கையில் உயர்நிலை அடைகின்ற போதும், தாழ்வு நிலை ஏற்படும் போதும் மனதில் மாற்றங்கள் இல்லாமல் காத்தருள்பவர். இத்தகைய சிறப்புமிக்க அகத்தியரை அவருடைய ஜெயந்தி நாளில் வருகை புரிந்து பூஜைகளில் பங்கேற்று ஆசிபெற பிராத்திக்கின்றோம். மேலும் பௌர்ணமி சனிக்கிழமை, வியாழக்கிழமை போன்ற நாட்களில் வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

ஆங்கில சுருக்கம்

அகஸ்தியர் சித்தர்களுக்கெல்லாம் முதன்மையானவர் என்றும் தலைவன் என்றும் கூறலாம். அவர் ஞானத்திற்கும் அறிவிற்கும் அதிபதி. இவரை வழிபடுவதால் நம் குழந்தைகளுக்கு கல்வியும் ஞானமும் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, ஆராய்ச்சிப் பணிகளில் வெற்றி பெறலாம். ராணிப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அகத்தியர் ஜெயந்தி விழா மற்றும் நோய் நிவாரண ஹோமம் நடந்தது.

கதை முதலில் வெளியிடப்பட்டது: வியாழன், டிசம்பர் 23, 2021, 14:30 [IST]

Source by [author_name]